India
சிறார் வயதை 18 என்பதிலிருந்து குறைக்க முடியுமா?- உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?
தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள இருபாலர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானால் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் பல வழக்குகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் விருப்ப உறவு கொண்டால் பெற்றோர் புகாரைத் தொடர்ந்து அதுவும் போஸ்கோ வழக்காக பதிவு செய்யப்படுகிறது.
இதில் பெரும்பாலும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாறிவரும் காலமாற்றுத்துக்கு ஏற்ப இதனை அணுக வேண்டும் என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சிறார் வயதை குறைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பதிலளித்துள்ள ஒன்றிய அரசு போஸ்கோ வழக்கில் சிறார் வயதை 18 லிருந்து குறைக்க முடியாது என்று பதிலளித்துள்ளது.
மேலும், சமூக சீர்திருத்தம், இளம்பருவத்தினர் சுயவிருப்பம் என்ற பெயரில் வயதை குறைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி வயதை குறைப்பது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்வதாக மாறிவிடும் என்று கூறியுள்ளது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!