India

ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவரா நீங்கள்? : உங்களுக்கான முக்கிய செய்தி இதோ!

இந்தியாவில் மிக முக்கியமான போக்குவரத்தில் ஒன்று ரயில் போக்குவரத்தாகும். எல்லா மாநிலங்களையும் இணைக்கும் வகையில் ரயில் சேவை இருப்பதால் அதிகமான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு, பயண டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவசரமாக நாம் பயணம் செய்ய வேண்டும் என்றால் ஒருநாளுக்கு முன்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதனால் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் பலருக்கும் தட்கல் டிக்கெட் கிடைக்காமல் இருந்து வருகிறது. பொதுமக்கள் அவசர பயணம் மேற்கொள்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாக கிடைக்க இல்லை. இதில் மோசடி நடப்பதாக பயணிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC முடக்கியுள்ளது. இந்நிலையில் ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆதார் அடிப்படையிலான OPT சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் ரயில்வே கவுன்டர்கள் அல்லது முகவர்கள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணம் செய்பவரின் ஆதார் சரிபார்ப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தமிழ்நாட்டின் அடையாளமாக மாறிய அரசு பள்ளி மாணவர்கள்” : கல்விச் சுற்றுலா குறித்து அமைச்சர் எழுதிய கட்டுரை!