India

”குப்பையிலிருந்து தங்கம் தயாரிக்கும் இயந்திரம்” : பா.ஜ.க அமைச்சரின் பலே ஐடியா!

உலகம் முழுவதும் குப்பையை அகற்றுவது ஒரு சவாலான காரியமாக இருந்து வருகிறது. குப்பையில் இருந்து உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படி குப்பையில் இருந்து எதை தயாரிக்க முடியும், எதை பயன்படுத்த முடியும் என்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், குப்பையிலிருந்து தங்கம் தயாரிக்கும் இயந்திரம் தயாரித்து வருவதாக பா.ஜ.க அமைச்சர் கூறியுள்ளது கிண்டலை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கால்நடை துறை அமைச்சராக இருப்பவர் தர்மபால் சிங். இவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், குப்பையில் இருந்து தங்கம் தயாரிக்கும் இயந்திரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குப்பைகளை முறையாக அகற்றவும் புதிய ஆற்றல் மற்றும் வளங்களை உருவாக்கவும் உதவும். மேலும் பொருளாதார ரீதியாகவும் பயனளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க அமைச்சர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பல்வேறு கருத்துக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

Also Read: ”மோடி ஆட்சியால் இந்தியாவை விட்டு வெளியேறும் முதலீட்டாளர்கள்” : ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!