India
24 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் தொகை திரும்பக்கிடைக்காது- ரயில்வே அறிவிப்புக்கு எதிர்ப்பு!
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில், இந்திய ரயில்வே கொண்டு வந்த சில முக்கிய மாற்றங்கள் மே 01 முதல் அமலுக்கு வந்தது. அதனபடி டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்திய ரயில்வே செய்துள்ளது. குறிப்பாக பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு காலத்தை ஒரே நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, வெவ்வேறு ரயில்களில் வெவ்வேறு முன்பதிவு காலங்கள் இருந்தன. எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்பாஸ்ட் என எந்த ரயிலாக இருந்தாலும், அனைத்து ரயில்களுக்கும் சரியாக 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
தட்கல் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது. ஏசி வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவுகள் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
ஒரு பயனர் ஐடி ஒரு நாளைக்கு 2 தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு, முழு பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், 75 சதவீத பணம் திரும்பக் கிடைக்கும். புறப்படுவதற்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், உங்களுக்கு 50 சதவீத பணம் திரும்ப கிடைத்துவிடும். 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்காது.
இந்த முக்கிய மாற்றங்கள் மே 01 முதல் அமலுக்கு வந்தது. குறிப்பாக 24 மணி நேரத்திற்கு உள் பயணச்சீட்டை ரத்து செய்யும் பட்சத்தில் 50% தொகை திரும்ப பெறப்பட்டு வந்த நிலையில் மாறாக 24 மணி நேரத்திற்கு முன்னதாக பயண சீட்டு ரத்து செய்யப்பட்டால் தொகை ஏதும் திருப்பித் தரப்படாது என இந்திய ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!