India
மகனுக்கு பதில் தந்தை... காலுக்கு பதில் கை... பாஜக ஆளும் ராஜஸ்தான் மருத்துவர்கள் செயலால் அலறும் மக்கள்!
ராஜஸ்தானில் மணிஷ் என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் இவரது இடதுகாலில் பலத்த காயமடைந்துள்ளதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக அவரும் அவரது தந்தையை வெளியே அமரவைத்து விட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக உள்ளே சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் கழித்து கண் விழித்து பார்த்த அவர், தனது தந்தையும் அருகில் கைகளில் கட்டுப்போட பட்டு படுத்திருந்ததை கண்டு அதிர்ந்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவரிடம் இதுகுறித்து விசாரிக்கும்போது, மணிஷின் தந்தை 60 வயதான ஜெகதீஷுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மகன் மணிஷ், மருத்துவ நிர்வாகத்திடம் சண்டையிட்டார். மேலும் தனது தந்தை முடக்கு வாதத்தால் பேச முடியாது என்றும், எப்படி விசாரிக்காமல் இவ்வாறு செய்தீர்கள் என்றும் மருத்துவமனையில் குமுறினார்.
இதையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட 60 வயது முதியவரின் மகன் மணிஷ் கூறுகையில், "அறுவை சிகிச்சைக்காக உள்ளே சென்று மயக்க நிலையில் இருந்தேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் கூட ஞாபகம் இல்லை. எனது தந்தையை வெளியே அமர்த்திவிட்டு சென்றிருந்தேன். ஆனால் நான் கண் விழித்து பார்க்கையில், அவர் 5-6 தையல்களுடன் எனது அருகில் உள்ள படுக்கையில் படுத்திருந்தார். எனக்கு என்ன என்றே புரியவில்லை.
விசாரிக்கையில் அதே மருத்துவமனையில் ஜெகதீஷ் என்று பெயர் கொண்ட மற்றொரு நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது ஜெகதீஷ் என்று அழைத்தவுடன் எனது தந்தை கையை உயர்த்தியுள்ளார். மருத்துவர்களும் எதுவும் கேட்காமல் அவரை அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
எனது தந்தை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரால் பேச இயலாது. மருத்துவர்கள் அவரை பற்றி விசாரிக்காமல் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்" என்று கதறினார். இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!