அரசியல்

”இவையெல்லாம் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?” : ஜக்தீப் தங்கரின் கருத்துக்கு தமிழ்நாடு MP-க்கள் கண்டனம்!

துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்துக்கு திருச்சி சிவா எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”இவையெல்லாம் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?” : ஜக்தீப் தங்கரின் கருத்துக்கு  தமிழ்நாடு MP-க்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒருமாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் இனி எந்த மசோதாக்களையும் ஆளுநர்களும், குடியரசு தலைவரும் கிடப்பில் வைத்திருக்க முடியாது. ஆளுநர்களின் அடாவடித்தனத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளிவைத்துள்ளது.

இந்த உத்தரவால் கடுப்பான துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், ”மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” என ஆணவத்துடன் பேசி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, துணை குடியரசு தலைவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். திமுக எம்.பி திருச்சி சிவா, "அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவு படுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது." என கண்டித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "உலகில் எங்கும் நிகழாத படி 153 நாடாளுமன்ற உறுப்பினர்களை மோடி அரசு இடைநீக்கம் செய்த போது இந்திய ஜனநாயகம், அணுகுண்டு, ஏவுகணை இவையெல்லாம் உங்கள் நினைவுக்கு வரவில்லையா ஜெகதீப் தன்கர் அவர்களே" விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories