India
டெல்லி வன்முறை வழக்கு : பா.ஜ.க அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் 2020 ஆம் ஆண்டு, பிப்.24 முதல் 26 ஆம் தேதி வரை வடகிழக்கு டெல்லி பகுதியில் இருமதங்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் வீடுகள், கடைகள், கல்வி நிறுவனங்கள், மசூதிகள் என்று ஆயிரக்கணக்கில் உடைமைகள் சேதபடுத்தப்பட்டன.
இந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வன்முறையில் தற்போது டெல்லியில் அமைச்சராக இருக்கும் கபில் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், இந்த புகார் குறித்து டெல்லி காவல்துறையிர்ன விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வன்முறை தொடர்பாக கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கோரி முகமது இலியாஸ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை நீதிபதி வைபவ் சவ்ராசியா, பா.ஜ.க அமைச்சர் கபில் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் பாஜக எம்.எல்.ஏ மோகன் சிங், காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!