India

5 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் ரூ.7,350 கோடி போதைப்பொருள் பறிமுதல் : அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக 11 ஆயிரத்து 311 கோடி போதைப் பொருள் பிடிபட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய அரசு அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், ”நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட ரூ.11,311 கோடி போதைப் பொருள் பிடிபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆண்டுகளில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் மட்டும் ரூ.7,350 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் மகாராஷ்டிராவில் ரூ.2,118 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரத்தின்படி பா.ஜ.க ஆட்சி நடக்கும் மாநிலங்களில் அதிக அளவு போதைபொருள் கடத்தப்பட்டு வருகிறது என்பது அம்பலமாகியுள்ளது.

Also Read: மீனவர்கள் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !