India

தமிழ்நாட்டில் புதிய ஜவுளிப் பூங்காக்களை திறக்கப்போவது எப்போது? : மக்களவையில் தி.மு.க MP கேள்வி!

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மிகவும் பாதிப்படைந்தது. இதனை சரிசெய்ய கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பலமுறை ஒன்றிய அரசை வலியுறுத்தி கடிதங்களும் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு தனது 2824 ஆண்டுற்கான நிதி நிலை அறிக்கையில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க “தமிழ்க் கனவுகள்” திட்டத்தின்கீழ் நிதியும் ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, மக்களவையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகத்திடம் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் முடங்கி கிடக்கும் ஜவுளித் தொழிலை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு :

தமிழ்நாட்டில் தயாரிப்பு தொழில்நுட்ப நெசவு மையங்கள் மற்றும் மினி ஜவுளிப் பூங்காக்களை அமைக்க பொருத்தமான இடங்களை தேர்வு செய்ய, எந்தக் குறிப்பிட்ட அளவுகோல்கள் பயன்படுத்தப்படுறது. இவ்வாறு அமைக்கப்படும் ஜவுளிப் பூங்காக்கள் மற்றும் மையங்கள், தேசிய தொழில்நுட்ப நெசவு இயக்கத்தின் (National Technical Textile Mission) இலக்குகளுடன் ஒருங்கிணைக்க திட்டம் ஏதேனும் உள்ளதா?

ரூ.1,480 கோடி தேசிய தொழில்நுட்ப நெசவு இயக்க நிதியிலிருந்து தமிழ்நாட்டில் புதிய நெசவு மையங்களை உருவாக்க எந்த அளவு நிதி ஒதுக்கப்படும், மேலும் தனியார் முதலீட்டாளர்களை ஈர்க்க கூடுதல் நிதி அல்லது ஊக்கத்தொகை ஏதேனும் வழங்கப்படுமா?

கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய தொழில்நுட்ப நெசவு இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மற்றும் செலவழிக்கப்பட்ட திதியின் விவரங்களை, மாநில வாரியான மற்றும் ஆண்டு வாரியான பட்டியலாக ஒன்றிய ஜவுளி அமைச்சகம் வழங்குமா?

தமிழ்நாட்டில் ஜவுளி மையங்களை ஆதரிக்க கட்டமைப்பு மேம்பாடு எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது, போக்குவரத்து, மின் விநியோகம் மற்றும் குடிநீர் வசதிகள் அடங்கிய மேம்பாட்டுத் திட்டங்கள் என்ன? இந்த புதிய மையங்கள், தற்- போது இயங்கிக்கொண்டிருக்கும் திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற நெசவு நகரங்களுடன் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படும்.

இவ்வாறு தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

Also Read: ”தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க பார்க்கும் பா.ஜ.க” : அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!