தமிழ்நாடு

”தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க பார்க்கும் பா.ஜ.க” : அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

வட மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க பா.ஜ.க முயற்சி செய்கிறது என அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார்.

”தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க பார்க்கும் பா.ஜ.க” : அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”வடமாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றவர்கள் நினைக்கிறார்கள். பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெருவதற்கு ஒரு காலமும் நமது முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். இரும்பு கரம் கொண்டு அடக்குவார்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு," திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் முதன்மையான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. இதுவரை 2504 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

1000 ஆண்டுகளுக்கு மேலான 49 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 3000 திற்கும் மேற்பட்ட கோயில்களின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. மேலும்,7154 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் .பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன். இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம்.

வடமாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்க அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றவர்கள் நினைக்கிறார்கள். பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெருவதற்கு ஒரு காலமும் நமது முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். இரும்பு கரம் கொண்டு அடக்குவார்.

திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்த்து வருகிறார்கள். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு இருக்கும் தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் பா.ஜ.க செயல்படுகிறது. கோயில் விவகாரத்தில் அரசியல் செய்தால் பா.ஜ.கவுக்கு பூஜ்ஜிய சதம் வாக்குக்கூட கிடைக்காது. ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல. அவர் இரட்டை நாக்கு உடையவர். இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories