India
நீட் முறைகேடு : நீட் தேர்வை சீரமைப்பு குழுவின் அறிக்கையை ரகசியமாக வைக்க முடிவு... காரணம் என்ன ?
நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.
இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், போராட்டமும் வெடித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து சிபிஐ விசாரணை செய்து நீட் தேர்வுத்தாள் கசிவை உறுதி செய்தனர். மேலும் இது குறித்த முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நீட் தேர்வு நடைமுறைகளை மாற்றியமைக்கவும், தேசிய தேர்வு முகமையையை சீரமைக்கவும் குழு அமைக்கப்பட்டது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட இந்த குழு தற்போது இது குறித்து பரிசீலனைகளை தயாரித்துள்ளது. இந்த நிலையில், அந்த பரிசீலனைகளை வெளிப்படுத்தினால் மீண்டும் தேர்வில் மோசடிகள் நடைபெறலாம் என்பதால் அதனை அரசு Classified ரகசிய ஆவணமாக பாதுகாக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!