India
”இந்திரா காந்திக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர்!
இந்தியா கூட்டணியால் தங்களது ஆசை நிராசையானதை அடுத்து பா.ஜ.க தலைவர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியை ’பப்பு’ என கேலி பேசினார்கள்.
ஆனால், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தைக் கண்டு பா.ஜ.க அஞ்சியது. ’பப்பு’ என்று கேலி செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ.கவிற்கு சவால்விட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள்திணறிவருகிறார்கள்.
மேலும் மக்கள் மத்தியில் ராகுல் காந்தியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க தலைவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியலை அப்பட்டமாக முன்கெடுத்து வருகிறார்கள். தற்போது அவருக்கு ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் பிட்டு கொலை மிரட்டலே விடுத்துள்ளார்.
ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, "நாட்டின் நம்பவர் ஒன் பயங்கரவாதி ராகுல்காந்தி" என வெறுப்புணர்வை தூண்டியுள்ளார். அதேபோல் பா.ஜ.க தலைவர் தர்விந்தர் சிங் மர்வா, இந்திரா காந்திக்கு நேர்ந்த கதியே உங்களுக்கும் ஏற்படும் என ராகுல் காந்திக்கு அப்பட்டமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதேபோல், உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், "நாட்டின் நம்பவர் ஒன் பயங்கரவாதி" என மக்கள் மத்தியில் பேசியுள்ளார். மேலும் சிவசேனா ஷிண்டே பிரிவு எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த 4 பேர் மீதும் டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!