India
லவ் ஜிகாத் : உத்தர பிரதேசத்தில் கொடூர சட்டத்தை கொண்டு வரும் யோகி அரசு!
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதேபோல் லவ் ஜிகாத் என்ற பெயரில் சிறுபான்மை மக்களின் காதல்களை கொச்சைப் படுத்தி அதற்கு எதிராக சட்டங்களை பா.ஜ.க மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையில் சட்டம் இயற்றியது. இதில் காதலித்து, மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் அந்த திருமணம் செல்லாது என்றும், ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சட்டத்தை மேலும் யோகி அரசு கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. அதில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை 20 ஆண்டுகளாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!