India
100% VVPAT வாக்குகள் எண்ண முடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - முழு விவரம்!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு சாதமாக முறைகேடுகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேடில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களையும் 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்ததை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழக்கியுள்ளது.
அதில், ”45 நாட்கள் சின்னம் பதிவேற்றும் இயந்திரத்தை சீல்வைத்து பாதுகாக்க வேண்டும். வேட்பாளர்கள் சந்தேகம் எழுப்பி 7 நாட்களுக்குள் கோரிக்கை வைத்தால் மைக்ரோ கண்ட்ரோலரை சோதனை செய்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.
சந்தேகம் எழுப்பும் வேட்பாளர்கள் தங்களுடைய சொந்த செலவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். சோதனையின் போது முறையீடு செய்யப்பட்டது உறுதியானால் அந்த பணத்தை தேர்தல் ஆணையம் திரும்ப வழங்க வேண்டும்" நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் ஆலோசனை வலுங்கியுள்ளனர்.
மேலும், VVPAT இயந்திரத்தில் அச்சாகும் சின்னத்தை வாக்காளர்கள் பெற்று தனி பெட்டியில் இட உத்தரவிட கோரிய கோரிக்கையையும், வாக்குச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!