India
உ.பி : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பர்... அம்மாவின் சம்மதத்தோடு நடந்த கொடூரம் !
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 10 வயது சிறுமி தனது தாயாருடனும், அண்ணன் ஒருவனுடனும் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமியின் தாயின் நண்பர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். வந்தவர் சிறுமியிடமும், அவரின் அண்ணனுடனும் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து தாயிடம் புகார் கூற அவரின் சம்மதத்துடனே இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் அண்ணன் அந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னரும் தாயின் நண்பரின் பாலியல் தொல்லை தொடர்ந்ததால் அவரும் வீட்டில் இருந்து வெளியேறி டெல்லிக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக சுற்றுத்திரிந்த சிறுமியை போலிஸார் மீட்ட நிலையில், அவரின் நடைபெற்ற விசாரணையில் இந்த கொடிய சம்பவம் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தாயையும் அவரின் நண்பரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!