India
80 வயது சொந்த பாட்டியை வன்கொடுமை செய்த 22 வயது பேரன்... உ.பி அதிர்ச்சியின் பின்னணி என்ன?
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ள பிஹவுர் கிராமத்தை சேர்ந்தவர் அமித் கௌதம். 22 வயது இளைஞரான இவர், அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். குடி போதைக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு சாலையில் சண்டை போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமை இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
முழு போதையில் தனது வீட்டுக்கு செல்லாமல், அதே பகுதியில் இருக்கும் இளைஞரின் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே அந்த மூதாட்டியிடம் வம்பிழுத்துள்ளார். மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதனை அந்த மூதாட்டி தடுக்க முயலவே, இளைஞர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
தொடர்ந்து மூதாட்டியை வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து மூதாட்டி தனது வீட்டிலிருந்து ஒலி எழுப்பவே, இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயத்துடன் கிடந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் மூதாட்டிக்கு ஒரு பல் போய்விட்டது.
இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியான 22 வயது இளைஞர் அமித்தை கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் 80 வயது தனது சொந்த பாட்டியை பேரனே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”