India
”தேர்தல் ஆணையத்தை தங்களது கட்சியின் அலுவலகமாக மாற்றிவிட்டது பா.ஜ.க” : டெரிக் ஓ பிரையன் MP!
ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளதாகப் பலத்த சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
முக்கியமாக முதல்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவும் நிறைவு பெறும் நிலையில், பிரதமர் மோடி ஒரே மாதத்தில் பல்லடம், சென்னை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 4 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதை உற்றுநோக்கினால், முதற்கட்ட தேர்தல் நடைபெறு வதன் காரணமாகவே மோடி அடிக் கடி தமிழ்நாடு வந்தாரா? மக்களவை தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே மோடியிடம் கொடுக்கப் பட்டதா? போன்ற சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மேற்குவங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோசமான வழிகளை கையாளுகிறது பா.ஜ.க.
மக்களைச் சந்திப்பதில் பா.ஜ.க மிகவும் பதற்றத்துடன் உள்ளது.தேர்தல் ஆணையத்தை தங்களது கட்சியின் அலுவலகமாக மாற்றிவிட்டது பா.ஜ.க சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!