India

கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மற்றும் பா.ஜ.க கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பா.ஜ.க கூட்டணியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராகச் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கூறியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அண்மையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு சீட் வழங்கப்படாததால் பா.ஜ.க தலைமை மீது அதிருப்தியில் உள்ளார் ஈஸ்வரப்பா.

மேலும் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு எதிராகச் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாகவும் ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். இது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

இது குறித்துப் பேசிய ஈஸ்வரப்பா, ”தனக்கு எதிராக எடியூரப்பா சதி செய்கிறார். எனது மகனுக்கு சீட் வழங்காமல் அவரது மகனுக்கு சீட் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் எடியூரப்பா மகனுக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன்” தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.கவின் வாரிசு அரசியலையும் கண்டித்துள்ளார்.

Also Read: "பாஜகவின் எதிர்ப்பை மீறி, 4000 கி.மீ நடந்துள்ளேன்"- ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் ராகுல்காந்தி பேச்சு!