India
39 தொகுதி - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் : ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி எது?
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் சத்தீஸ்கர் 6, கர்நாடகா 7, கேரளா 16, தெலங்கானா 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் திருவனந்தபுரத்தில் சசிதரூர், கண்ணூர் தொகுதியில் கே.சுதகாரணம், ஆலப்புழா கே.சி.வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர் தொகுதியில் டி.கே.சுரேஷ் போட்டியிடுகிறார். இந்த 39 தொகுதியில் 15 பேர் பொது வேட்பாளர்கள். 24 பேர் SC,ST,OBC பிரிவை சேர்ந்தவர்கள்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!