India
15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : தலைமறைவான 3 சிறுவர்கள்... டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி !
தலைநகர் டெல்லியின் தென்மேற்கில் அமைந்துள்ள கபஷேராவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை இவரின் நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு வருகை தருமாறு அழைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியும் தனது நண்பனின் அழைப்பை ஏற்று அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நண்பனின் வீட்டில் அவரின் இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். சிறுமியின் நண்பரின் பெற்றோர் வெளியே சென்றிருந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த அந்த மூன்று பெரும் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்த போதே பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்து அவரை வீட்டில் இருந்து அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பின்னர், இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக உள்ள 3 குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரும் மைனர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!