India
கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் வந்த LOVE LETTER.. முன்னாள் மாணவர் செய்த செயலால் அதிர்ச்சி - பின்னணி என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வானில் அமைந்துள்ளது குஷ்காரா மகாவித்யாலயா (Gushkhara Mahavidyalaya) என்ற கல்லூரி. இங்கு பல்வேறு மாணவர்கள் படித்து வரும் நிலையில், கல்லூரி முதல்வர் கையெழுத்து மற்றும் முத்திரையோடு காதல் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில், "குஷ்கரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர், அதே கல்லூரியில் 5-ம் செமஸ்டரில் படிக்கும் மாணவி ஒருவரை, சுருக்கமாகச் சொன்னால் உங்களை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். ஆனால் நீங்கள் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே தயவு செய்து அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏதாவது முடிவெடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குஷ்காரா மகாவித்யாலயா கல்லூரியின் லெட்டர்ஹெட்டில், கடந்த 25.12.2023 அன்று எழுதப்பட்ட இந்த கடிதத்தில், அந்த கல்லூரியின் முதல்வர் சுதீப் சட்டோபாத்யாயின் கையெழுத்தும், முத்திரையும் இருந்துள்ளது. இந்த கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது.
தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த சம்பவத்தில் 2 மாணவிகள், 1 முன்னாள் மாணவர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் அந்த கல்லூரியில் வெளியிடப்பட்ட பழைய நோட்டீஸை ஸ்கேன் செய்து, சீல் வைத்து கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை எழுதியது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த கடிதம் சீனியர் மாணவர் அனுப்பியதாகவும், பார்க்க நகைச்சுவையாக இருந்ததால் இணையத்தில் பதிவிட்டதாகவும், பின்னர் அதனை நீக்கி விட்டதாகவும் அந்த மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கல்லூரி முதல்வருக்கு கடிதம் வாயிலாக மன்னிப்பு கோரினர்.
பின்னர் அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்த கையோடு, போலீசாரும் எச்சரித்து அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் விடப்பட்டது. கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஜூனியர் மாணவிக்கு முன்னாள் மாணவர் எழுதிய காதல் கடிதம் வைரலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!