India
2 ஆண்டாக சிறுமி பாலியல் வன்கொடுமை : சிகரெட்டால் சூடு வைத்து, மொட்டை அடித்த கொடூரன் கைது !
மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா பகுதியில் கணேஷ் கும்ரே (வயது 29) என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகள் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அடிக்கடி அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை வெளியே கூறினார் கொலை செய்து விடுவேன் என அந்த நபர் மிரட்டியதால் இது குறித்து சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதனை அந்த நபர் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் கணேஷ் கும்ரே அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிகரெட்டால் சிறுமிக்கு சூடுவைத்துள்ளார். அதோடு அந்த சிறுமிக்கு மொட்டை அடித்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல் நிலையத்துக்கு புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு நடந்த இந்த கொடுமை வெளியே தெரிந்தது. தொடர்ந்து குற்றவாளி கணேஷ் கும்ரேவை போலீசார் கைது செய்து சிறையில் அடித்தனர். குற்றவாளி மீது ஐபிசி-யின் 363, 376, 354, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளி என்பதால், அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். சிறுமிக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!
-
”மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” : மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம்!