India

வங்கக் கடலில் உருவான புதிய புயல் - சென்னைக்கு பாதிப்பா? : இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதையடுத்து வங்கக்கடலில் கடந்த 14ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

அதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதியில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வரும் நவ.20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புழல் ஒடிசா மாநிலம் பாரா தீப்பிற்குக் கிழக்கு வடகிழக்கு திசையில் 250 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் டிகாவிற்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 180 கிலோமீட்டர் தொலைவிலும், வங்கதேசம் கெபுபராவிற்கு தென் மேற்கு திசையில் 180 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகளில் கெபுபாராவிற்கு அருகே கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், கரையைக் கடக்கும் பொழுது காற்றின் வேகமானது 60 கிலோமீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் என்றும், அவ்வப்போது 80 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: தேர்தல் பிரசாரத்தில் அனுமர், இராமர்.. பாஜகவுக்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? -உத்தவ் தாக்கரே ஆவேச கேள்வி!