அரசியல்

தேர்தல் பிரசாரத்தில் அனுமர், இராமர்.. பாஜகவுக்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? -உத்தவ் தாக்கரே ஆவேச கேள்வி!

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் போது பிரதமர் மோடி ‘பஜ்ரங்பலி’ என்ற பெயரில் வாக்கு சேகரித்தார். இது தேர்தல் ஆணைய விதிகளை மீறுதல் இல்லையா?" என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் அனுமர், இராமர்.. பாஜகவுக்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? -உத்தவ் தாக்கரே ஆவேச கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுகிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து மீதமுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திலும் மற்றும் சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தலும் 17-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. அதோடு ராஜஸ்தானில் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து அரசியல் கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் அனுமர், இராமர்.. பாஜகவுக்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? -உத்தவ் தாக்கரே ஆவேச கேள்வி!

இந்த நிலையில், மதத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா?. இராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை என்றால் ஏன் மத்தியப் பிரதேச மக்களுக்கு மட்டும்? ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மக்களுக்கும் வழங்கலாமே?

அமித் ஷாவுக்கு தெரியும் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்று. எனவேதான் இராமரை வைத்து வாக்கு கேட்கிறார்கள். கர்நாடகத்தின் சட்டப்பேரவை தேர்தலில் கூட பிரதமர் மோடி ‘பஜ்ரங்பலி’ என்ற பெயரில் வாக்கு சேகரித்தார். இது தேர்தல் ஆணைய விதிகளை மீறுதல் இல்லையா? அப்படி விதி மாற்றப்பட்டிருந்தால், அதனை பாஜகவிடம் மட்டும் சொல்லப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் அனுமர், இராமர்.. பாஜகவுக்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? -உத்தவ் தாக்கரே ஆவேச கேள்வி!

முன்னதாக கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர், அனுமர் பெயரை வைத்து மத அரசியலை தூண்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தற்போது மத்திய பிரதேசத்தில், இராமர் பெயரை வைத்தும், கோயிலை வைத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற பிரசாரத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜகவுக்கு வாக்களித்தால் அயோத்தி இராமர் கோயிலுக்கு இலவச பயண சேவை வழங்கப்படும் என்று பிரசாரம் மேற்கொண்டார். இவரது இந்த பிரசாரத்திற்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே புகார் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories