India
வகுப்பறையில் பூட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் அதிர்ச்சி செயல் !
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியில் இருந்து பல்வேறு மாணவ மாணவியரும் படித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கு 16 வயது மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் இந்த மாணவியை அவரது வகுப்பை சேர்ந்த சக மாணவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அடிக்கடி கொடுத்து வந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 9-ம் தேதியும் அந்த மாணவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, பள்ளி தலைமையிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இதன் விளைவாக அந்த மாணவர், மீண்டும் இந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பள்ளி நேரத்தில் மாணவர்கள் அனைவரும் PET வகுப்பிற்கு விளையாட சென்றுள்ளனர். அப்போது இந்த மாணவியை தடுத்த, அந்த மாணவன், அவரை வகுப்பினுள் அடைத்து வைத்து சண்டையிட்டுள்ளார். மேலும் அந்த மாணவியை கடுமையாக தாக்கியும் உள்ளார். அதோடு தனது சக நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து மீண்டும் தாக்கியுள்ளார்.
இதில் வகுப்பிலே மயங்கிய மாணவியை சக மாணவிகள் மீட்டுள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, இதனை கேட்டு அதிர்ந்த அவர்கள், குற்றம்சாட்டப்பட்ட மாணவன், அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தனர்.
அதன்பேரில் அனைத்து மாணவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகள் ஏற்கனவே இதுகுறித்து புகார் அளித்தும், பள்ளி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்காததே இந்த சம்பவத்துக்கு காரணம் என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கதறி அழுது குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த சம்பவம் குறித்து பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!