India
ஆட்டோ மீது மோதிய லாரி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த துயரம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்திற்குட்பட்ட தாஹோத் - அலிராஜ்பூர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் ஆட்டோ நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் உயிரிழந்தவர்களின் விவரங்களை போலிஸார் சேகரித்து வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!