அமெரிக்காவின் பென்சில்வெனியா மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்கு ஸ்டோன்மேன் வில்லி (Stoneman Willie) என்ற வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் இவரது உயிரிழந்து சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அவரது உடல் தற்போது தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஸ்டோன்மேன் வில்லி, கடந்த 1800-களில் திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பென்சில்வேனியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும்போது தனது உண்மையான பெயருக்கு பதிலாக ஜேம்ஸ் பென் என்ற போலியான பெயர் அடையாளங்களை கொடுத்துள்ளார். இந்த சூழலில் சிறையில் இருந்த அவர் 1895-ம் ஆண்டு தனது 37-வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது போலி பெயரை வைத்து அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க போலீசார் முனைப்பு காட்டினர். ஆனால் அவரது உடலை வாங்க யாரும் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி அவரது உடலை உரியவர்கள் பெற்றுக்கொள்ளும் வரை, அதை எம்பாமிங் நுட்பங்களைப் பயன்படுத்தி மம்மியாக மாற்றப்பட்டது.
இதையடுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சுமார் 1950-களில் அரசே இறுதிச்சடங்கு நடந்த முடிவு செய்தது. இதனால் அவரது உடலை கருமையான சூட் மற்றும் போடியுடன் அதன் மார்பின் குறுக்கே சிவப்பு நிறப் பட்டையும் அணிவிக்கப்பட்டு பென்சில்வெனியாவில் உள்ள ஆமன் சர்ச்சில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் என பலரும் பல ஆண்டுகளாக இந்த உடலை நேரில் பார்த்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சுமார் 13 தசாப்தங்களுக்குப் பிறகு, அங்குள்ள ஃபாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. 128 ஆண்டுகளுக்கு முன் இறந்த நபர் மம்மியாக்கப்பட்டு, தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.