India
தொடரும் விபத்துகள்.. திடீரென தண்டவாளத்தில் ஏறி நின்ற இரயில்.. பதறியடித்த பயணிகள் : நள்ளிரவில் அதிர்ச்சி!
அண்மைக்காலமாக இரயில் குறித்த விபத்துகள் செய்தி அதிகமாக வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒடிசாவில் ஏற்பட்ட இரயில் விபத்தில் சிக்கி பல பயணிகள் உயிரிழந்தனர். 3 இரயில்கள் தடம் புரண்டதில் பெரும் சேதம், உயிர் பலிகள் ஏற்பட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த கோர சம்பவங்களில் இது மிகவும் முக்கியமானவையாக இருக்கும். இதைத்தொடர்ந்து பல இடங்களில் இரயில் விபத்து, தடம் புரளுதல் உள்ளிட்ட செய்திகள் வெளியாகி வந்தன. அதோடு அண்மையில் தமிழ்நாட்டில் நின்று கொண்டிருந்த இரயிலில் வட மாநில சுற்றுலா பயணிகள் அனுமதியை மீறி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி அது வெடித்து விபத்தாகி 10 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து இப்படி நிகழ்வுகள் நடக்க, தற்போது மேலும் ஒரு சம்பவம் ந்டந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள மதுராவில் இரயில் நிலையத்தில் வழக்கம்போல் இன்றும் மின்சார இரயில்கள் இயங்கி கொண்டிருந்தது. அப்போது நேற்று இரவு சுமார் 10.49 மணியளவில் நேரத்தில் சென்று கொண்டிருந்த இரயில் ஒன்று திடீரென ஷாகுர்பஸ்தி என்ற இடத்தில் இருந்து இரயில் ஒன்று மதுரா இரயில் நிலையத்திற்கு பயணிகளுடன் வந்தது.
அதில் இருந்து அனைத்து பயணிகளும் கீழே இறங்கினர். இதையடுத்து சில மணி நேரங்களில் மதுராவில் இருந்து காலியான பெட்டியுடன் புறப்பட்ட அந்த இரயில், திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி நடைமேடையில் ஏறியது. இந்த விபத்தில் அங்கிருந்த சக பயணிகள் கத்தி கூச்சலிடவே இரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் மதுரா சந்திப்பை கடந்து செல்லும் மால்வா எக்ஸ்பிரஸ் உட்பட பல இரயில்கள் பதிப்படைந்துள்ளது. இரவு நேரத்தில் மின்சார இரயில் ஒன்று நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!