India
இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் கோடிக்கணக்கான பணம் யாருடையது?... மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தங்களது பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு நடைபெற்ற ஒரு பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாடினார். அப்போது ஒன்றிய பா.ஜ.க அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பா.ஜ.கவும் மோடியும்2-3 கோடீஸ்வரர்களுக்காக உழைக்கின்றனர். பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி, இந்தியாவுக்கு வெளியே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். சந்தையில் தனது சொந்த நிறுவனங்களின் பங்குகளின் விலையை உயர்த்தியுள்ளார்.
அதானியிடம் இந்தியாவின் பொதுச் சொத்துக்களை ஒன்றிய அரசு விற்று வருகிறது. ரயில் நிலையங்களையும் அவருக்கு மோடி அரசு விற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி அனைத்தையும் அதானியிடம் ஒன்றிய அரசு விற்கிறது.
ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கு மாறாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்தியாவுக்கு வெளியே செல்கிறது. இது யாருடைய பணம் என்பதை மோடி சொல்ல வேண்டும்.
பா.ஜ.க நாடு முழுவதும் வெறுப்பைப் பரப்பி வருகிறது. ஜாதி, மதம், மொழி என பிரித்து மக்களை சண்டையிட வைக்கிறது பா.ஜ.க. எங்கெல்லாம் வெறுப்பைப் பரப்புகிறோர்களோ அங்கு எல்லாம் காங்கிரஸ் அன்பைப் பரப்பும். இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை பா.ஜ.க உடைத்துவிட்டது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு சிறு வணிகர்களை அழித்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!