India
ஹலோ உள்ளே வரலாமா?... வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்லப்பாம்பு : பதறியடித்து ஓடிய குடும்பம்!
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சூரியகாந்தி நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வருபவர் தணிகாசலம். இந்நிலையில் இவரது வீட்டின் வரவேற்பு அறையில் 6 அடி நீள நல்லப்பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே இது குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் சண்முகம் மற்றும் சக்திவேல் ஆகியோர் பாம்பைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் நல்லபாம்பு ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்று மரங்களுக்கு இடையே சென்று மறைந்து கொண்டது. இதனால் பாம்பை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பாம்பைப் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டனர். கடும் வெயில் காரணமாக அருகில் உள்ள காலி இடத்திலிருந்து பாம்புகள் குடியிருப்புக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மரம், செடிகள் அருகே உள்ள வீட்டின் ஜன்னல்களைத் திறக்காமல் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!