சினிமா

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்.. அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !

'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்.. அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ். கடந்த 2018-ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தனது முதல் படத்தையே மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்று முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாறினார்.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த 2021- ல் கர்ணன் படத்தை இயக்கினார். கண்டா வரச்சொல்லுங்க.. வுட்றாதீங்க எம்மோ.. ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க, இந்த படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், 3-வதாக உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்.. அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பார்வை (First Look) உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி வெளியானது. இரண்டு போஸ்டர்களில் முதல் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் வடிவேலுவும், வாளுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு அரியணையில் அமர்ந்திருக்கும் வகையில் உள்ளது.

மற்றொரு போஸ்டரில் கேடயம், ஈட்டி, குதிரை என உருவங்களுடன் உதயநிதி நடுவிலும், மற்ற இரண்டு பக்கங்களில் ஒரு பக்கம் வடிவேலு, மறுபக்கம் பகத் பாசிலும் உள்ளனர். இந்த இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் வைரலானது. அதன்பின்னர் இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர். மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இது வரவேற்பை பெற்றது.

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்.. அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !

இந்த நிலையில், 'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்கில் வெளியாகும் எனமுன்பே கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சர் பதவியை ஏற்கும் முன்னரே நடிப்பதில் இருந்து விடுபடுவதாக அறிவித்தார். மேலும் இறுதியாக மாமன்னன் படத்தை மட்டும் நடித்து கொடுப்பதாக கூறி, மாமன்னன் படத்தில் மட்டும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் இணையவிருந்த படத்தில் இருந்தும் உதயநிதி ஸ்டாலின் வெளியேறினார்.அதன்படி உதயநிதி ஸ்டாலினின் இறுதி படம் 'மாமன்னன்' தான். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், விரைவில் வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories