India
கர்நாடகா தேர்தல் முடிவு நிலவரம்.. 8 பா.ஜ.க அமைச்சர்கள் கடும் பின்னடைவு: பெரும்பான்மை பெறும் காங்கிரஸ்!
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, ஜனதா தளம் கட்சிக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இந்த மூன்று கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜக 69 இடங்களிலும், ஜனதா தளம் 26 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
அதேபோல் கனகவுரா தொகுதியில் போட்டியிட்டுள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் உள்ளார். மேலும் வருணா தொகுதியில் போட்டியிட்டுள்ள சித்தராமையா முன்னிலையில் உள்ளார்.
இந்த தேர்தலில் பா.ஜ.க அமைச்சர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். தற்போது நிலவரப்படி 8 பா.ஜ.க அமைச்சர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று பின்னடைவில் உள்ளனர். எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் பின்னடைவில் உள்ளார்.
அதேபோல், வருணா தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா பின்னடைவு. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சித்தராமையா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
மேலும் திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் , கிருஷ்ணராஜ் பேட் தொகுதியில் போட்டியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடா, பீளகி தொகுதியில் போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி மற்றும் பி.ஸ்ரீராமலு, முனைவர் சுதாகர், கோவிந்த கார்ஜோள் ஆகிய பா.ஜ.க அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!