India
‘‘முள்வேலிக்கு பின் எதிர்காலம்..” - ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்.. எதனால் தெரியுமா ?
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கிருக்கும் ஆளுங்கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. 224 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் போட்டியிடும் கட்சியினர் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பாஜக சார்பாக பிரதமர் மோடியும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வருகிறார்.
இது சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குல்பர்காவில் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலையில் நின்றிருந்த குழந்தைகளுடன் உரையாடினார். மேலும் தன் கை விரல்களை வைத்து குழந்தைகள் அருகே நின்று மேஜிக் செய்வது போல் செய்கை காட்டினார். ஆனால் மோடி வருகையில் குழந்தைகளோ முள் வேலிக்கு பின்னால் நின்றிருந்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், குழந்தைகளிடம் மோடி நடந்து கொண்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.முள் வேலிக்கு பின்னால் குழந்தைகள் நிற்பது தீண்டாமையை வழிவகுக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்றால் குழந்தைகள் முன்னாள் கயிறோ, கம்போ வைத்திருக்க வேண்டும். அதனை விட்டு முள் வேலி வைத்திருப்பது மிகவும் தவறு என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி ரமேஷ்குமார், ''குழந்தைகளை மோடி கம்பி வேலிக்கு அந்த பக்கம் நிறுத்தி வைத்து பேசியுள்ளார். இது அவரது பாகுபாடு நிறைந்த மனநிலையை காட்டுகிறது. ஆனால் ராகுல் காந்தி எங்கு குழந்தைகளை அன்பாக அரவணைத்து பேசுகிறார்'' என விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து முள் வேலிக்கு பின்னால் குழந்தைகளை நிற்க வைத்து மோடி பேசியுள்ள சம்பவம் பலரது மத்தியிலும் கண்டங்களை குவித்து வரும் நிலையில், நடிகரும், அரசியல் பிரமுகருமான பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஹிட்லராகும் மோடி.. வரலாறு மீளுகிறது. முள்வேலிக்கு பின் எதிர்காலம். எச்சரிக்கை கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதே போல் முள்வேலிக்கு பின்னால் குழந்தைகளை நிற்க வைத்த ஹிட்லரின் பழைய புகைப்படத்தையும், மோடியின் தற்போது புகைப்படைத்தையும் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!
-
“நடப்பாண்டில் 10 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்!” : TNPSC தலைவர் பிரபாகர் பேட்டி!