India
’ஒன்றிய அரசுக்கு நெருக்கமானவன்’.. பிரதமர் மோடி படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்த உ.பி. வாலிபர் கைது!
சமூக ஊடகங்கள் வளர்ச்சியடைந்ததை அடுத்து பல்வேறுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தியும் மோசடிகள் நடைபெறுகிறது. போலிஸார் எவ்வளவு எச்சரிக்கை செய்தாலும் பொதுமக்கள் இந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களுடன் இருப்பதுபோன்று மார்பிங் செய்த புகைப்படத்தைப் பயன்படுத்தி வாலிபர் ஒருவர் மோசடி செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் முகமது காஷிப். வாலிபரான இவர் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களுடன் தான் இருப்பதுபோன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பயன்படுத்தித் தான் ஒன்றிய அரசுக்கு நெருக்கமான நபர் என்பதைக் காட்டிக் கொண்டுள்ளார். இதன் மூலம் டெண்டர்கள் மற்றும் அரசு வேலைகளை வாங்கி தருவதாகப் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரின் இந்த மோசடி செயல் வெளியே தெரிந்ததை அடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் முகமது காஷிபை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 3 ஐபோன்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர் யார் யாரிடம் மோசடி செய்துள்ளார் என்ற விவரங்களை போலிஸார் சேகரித்து வருகின்றனர்.
Also Read
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
-
திருட்டு வதந்தி : பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொலை - உ.பி-யில் அதிர்ச்சி!
-
அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் கைது!