India
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை.. பா.ஜ.க தொடுத்த வழக்கில் 4 ஆண்டுக்குப் பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பு!
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.
இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் சர்ச்சையை எழுப்பினர். பிறகு குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளியன்று நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இன்று இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து "உண்மையே தன்னுடைய கடவுள் என்றும் அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய மதம்" என்று ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு ராகுல் காந்திக்குப் பிணை வழங்கியது நீதிமன்றம்.ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!