India
சத்தீஸ்கர் : கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்.. திருவிழா பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் !
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் மாவ்லி பதார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வருடம் தோறும் திருவிழா நடைபெறும். கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் அந்த பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது உறவுக்காரர் ஒருவருடன் இந்த திருவிழாவுக்கு வருகை தந்துள்ளார். திருவிழாவுக்கு வந்து அங்கு கொண்டாட்டங்களை கண்டுகளித்த இருவரும் தேவையான பொருள்களை அங்கு வாங்கியுள்ளனர்.
பின்னர் அங்குள்ள கடை ஒன்றில் உணவருந்தி விட்டு இரவு பொழுதில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இவ்ர்களை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று தடுத்தி நிறுத்தியுள்ளது. மேலும், அந்த பெண்ணிடம் அந்த கும்பல் தவறாக நடக்கவும் முயற்சித்துள்ளது.
இதனை அந்த பெண்ணோடு வந்த உறவுக்காரர் கண்டித்த நிலையில், அவரை அந்த கும்பல் அடித்து துரத்தியுள்ளது. அதோடு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டு பகுதிக்கு தூக்கிச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
இதில் அந்த பெண் மயங்கிய நிலையில், அவரை அங்கேயே விட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றுள்ளது. பின்னர் ஒருகட்டத்தில் மயக்கம் தெளிந்த அந்த பெண் அங்கிருந்து ஒருவழியாக வீட்டுக்கு திரும்பி தனக்கு நடந்த கொடுமை குறித்து குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!
-
“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!