India
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலை.. நெருங்கிய உறவினரால் நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !
கேரள மாநிலம், மலப்புரம் அருகே மேலாற்றூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் இரு நாட்களுக்கு முன்னர் தனது பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் இது குறித்த தகவல் போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலிஸார் சிறுமிக்கு நன்கு தெரிந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சிறுமியின் உறவினரான முகம்மது ரபீக் (வயது 21) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை அந்த இளைஞர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், தொடர்ந்து இதுபோன்ற பலமுறை அந்த சிறுமியிடம் அத்துமீறியதும் தெரியவந்தது. இதன் காரணமாக சிறுமி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முகம்மது ரபீக்கை கைது செய்த போலிஸார் அவரை சிறையில் அடைந்தனர். கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை கல்லூரி முதல்வரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நிலையில், தற்போது கேரளாவில் பாலியல் வன்கொடுமை காரணமாக சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!