India

படிக்காத மணமகன்.. திருமண மேடையில் 10 ரூபாய் நோட்டால் தெரியவந்த உண்மை.. மணமகள் எடுத்த அதிரடி முடிவு !

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பரூக்காபாத் மாவட்டத்தின் துர்காப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு வரன் அமைந்துள்ளது. மணமகன் நன்கு படித்தவர் என்றும், நல்ல வேலையில் இருக்கிறார் என்றும் கூறி மணமகள் வீட்டாரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர்.

அதனபடி கொத்வாலி என்ற பகுதியில் கடந்த 19-ம் தேதி அன்று ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமணத்துக்கு முந்தைய நாள் திருமண சடங்குகள் நடைபெற்று மாப்பிள்ளை குதிரையில் ஏற்றி திருமண ஊர்வலம் சென்று திருமண மகிழ்ச்சியை கொண்டாடினர்.

ஆனால், திருமண சடங்கின் போது மணமகன் படித்தவரா என்பது குறித்த சந்தேகம் மணமகளின் அண்ணனுக்கு எழுந்துள்ளது. மணமகன் குடும்பத்தினர் பொய் சொல்லி இந்த திருமணத்தை நடத்திவைக்கிறார்களா என்று யோசித்து இதுகுறித்த உண்மையை கண்டறிய திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக திருமணத்தின் போது ப்ரோகிதரிடம் 10 ரூபாய் தாள் கட்டுகளை கொடுத்த மணமகளின் சகோதரர் அதனை மணமகனிடம் கொடுத்து எண்ணி வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி ப்ரோகிதரும் மணமகனிடம் 10 ரூபாய் தாள் கட்டுகளை கொடுத்து எண்ணித்தருமாறு கூறியுள்ளார்.

ஆனால், மணமகனை அந்த ரூபாய் நோட்டுகளை எண்ண முடியாமல் தவித்துள்ளார். இதன்மூலம் மணமகன் படிக்கவில்லை என்றும், தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் மணமகள் வீட்டார் புரிந்து இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மணமகளும் படிக்காத மணமகன் தனக்கு வேண்டாம் என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதன் பின்னர் மணமகன் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், மணமகனின் வீட்டார் உண்மையை மறைத்துவிட்டனர் என்றும், ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: 24 நாட்களாக நடுக்கடலில் சிக்கித்தவித்த படகோட்டி.. ஒரு வார்த்தையால் உயிர்பிழைத்த அதிசயம்.. நடந்தது என்ன ?