India
பொதுக்கழிப்பறையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 சிறுவர்கள் செய்த கொடூரம்.. மும்பையில் அதிர்ச்சி !
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றங்கள் குறைந்த வண்ணம் இல்லை. அதிலும் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தினம் ஒன்று என்ற அளவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மும்பையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் கட்கோபார் என்ற பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதியில் இருந்து பொதுக்கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது இதனை கவனித்த அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் கழிப்பறைக்கு சென்று அங்கு இருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
அதோடு நிற்காத சிறுவர்கள் அந்த பாலியல் வன்கொடுமை வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ அந்த பகுதியில் பரவத்தொடங்கிய நிலையில், சிறுமியின் வீட்டாருக்கு இது குறித்து தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!