India
மனித எலும்பு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்.. மூட நம்பிக்கையால் மருமகளை கொடுமைப்படுத்திய மாமியார்!
மகாராஷ்டிராவில் சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு, குழந்தை பெறுவதற்காக மருமகளை எனித எலும்பால் செய்த பொடியைச் சாப்பிடச் சொல்லி மாமியார் மற்றும் கணவர் கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்து சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் பல சாமியார்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்படிச் சென்றபோது ஒரு சாமியார், மனித எலும்பால் செய்யப்பட்ட பொடியைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மருமகளைக் கொங்கன் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, மனித எலும்பைச் சாப்பிட சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இது குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து போலிஸார் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் குடும்பத்தினர் நன்கு படித்திருந்தும், குழந்தைக்காக மருமகளை மனித எலும்பு சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?