India
WIKIPEDIA தளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை இதுதான்.. இந்தியாவின் அடையாளமாக மாறிய ‘தெற்கு’!
இந்தியாவில் ஒன்றிய அரசு என்னதான் தென்னிந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் புறக்கணித்தாலும் தெற்கு புறக்கணிப்பையும் மீறி உலக அளவில் ஜொலித்து வருகிறது. இந்தியாவில் தெற்கு மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பொருளாதார அளவிலும் மனிதவள குறியீடு போன்றவற்றிலும் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கின்றன.
கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி போன்றவற்றிலும் தென்னிந்திய மாநிலங்கள் இந்தியாவின் அடையாளமாக திகழ்கின்றன. இந்த நிலையில் இந்தியாவை குறித்த கட்டுரைகளில் அதிகம் ‘SOUTH’ என்ற வார்த்தை தான் இடம்பெற்றுள்ளது என்பது இந்தியாவின் அடையாளம் தெற்குதான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளவில் பிரபலமான தளங்களில் ஒன்று விக்கிபீடியா. அதில் பல்வேறு மொழிகளில் பல லட்சம் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. விக்கிபீடியா கட்டுரைகளில் ஒரு நாட்டில் அதிக பட்சமாக இடம்பெற்றுள்ள வார்த்தைகள் குறித்த விவரங்களை TheLanguageNerds.com என்ற இணையதளம் வெளியிட்டுள்ளார்.
அதில், உலக நாடுகளில் விக்கிப்பீடியா கட்டுரைகளில் அதிகமாக இடம்பெற்ற வார்த்தையை வைத்து அடையாளப்படுத்தியதில், இந்தியாவை ‘SOUTH’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் திரும்பத் திரும்ப SOUTH என்ற வார்த்தையே இடம்பெற்றதால் இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது அதில் ‘SOUTH’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் கலை, அறிவியல், கலாச்சாரம், மொழி, பண்பாடு, வரலாறு, அரசியல் என எல்லாவற்றிலும் இந்தியாவின் தென்மாநிலங்கள் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!