India
கூலிப்படையை ஏவி பெற்ற மகனை கொன்ற பெற்றோர்.. தெலங்கானாவில் நடந்த பகீர் சம்பவம்!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சிங். இவரது மனைவி ராணி பாய். இந்த தம்பதிக்குச் சாய் ராமன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான மகன் சாய் ராம் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடிப்பதற்குப் பணம் கேட்டுப் பெற்றோரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இவரை மாற்றுவதற்காக அவரது சகோதரி சாய் ராமை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவருக்கு அந்த சிகிச்சை பலன் கொடுக்கவில்லை. அங்கிருந்து வந்த பிறகும் அவர் தொடர்ந்து வழக்கம்போல் குடித்தே வந்துள்ளார்.
இந்நிலையில் சூர்யபேட் எனும் பகுதியில் மர்மான முறையில் இறந்து கிடந்த சாய் ராமின் உடலை போலிஸார் மீட்டுள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
மகன் காணாமல் போனது குறித்துப் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சாய் ராம் உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாகப் பெற்றோர்களுடன் காரில் சென்ற சிசிடிவி காட்சியை போலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், மகன் குடித்துவிட்டு கொடுமைப் படுத்துவதால் கூலிப்படையை ஏவி மகனை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். கூலிப்படைக்கு ரூ. 6 லட்சம் வரை தருவதாக ஒப்புக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
குடிபோதையில் கொடுமைப் படுத்திய மகனைக் கூலிப்படை ஏவி பெற்றோர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!