India
பெண் வீட்டில் கொடுத்த கார்.. ஆசை ஆசையாக மணமகன் ஓட்டி பார்த்தபோது நடந்த கொடூரம்: துக்க வீடான திருமண வீடு!
உத்தர பிரதேச மாநிலம், அக்பர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் குமார். இவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து திருமணத்துக்கு முன்பு நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மணமகனுக்கு வரதட்சணையாக கார் ஒன்று வழங்கப்பட்டது. அருண் குமாருக்கு கார் ஒட்ட தெரியாது என்றாலும் பெண் வீட்டிலிருந்து கார் கொடுத்ததால் ஓட்டிபார்க்களாம் என முயன்றுள்ளார்.
இதையடுத்து ஆசை ஆசையாகக் காரை ஓட்டிப்பார்த்துள்ளார். அப்போது பிரேக் பிடிப்பதற்குப் பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார் .இதனால் கார் வேகமாக முன்னாள் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், அருண் குமாரின் அத்தை சர்ளா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 10 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அருண் குமாரின் கவனக்குறைவாலே இந்த விபத்து நடந்துள்ளது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரதட்சணையாக கொடுத்த காரை புதுமாப்பிள்ளை ஓட்டிபார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது அத்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!