வைரல்

கையை சுற்றிய விஷப்பாம்பு.. அதிர்ச்சியில் பாம்மை கடித்து கொலைசெய்த சிறுவன்.. சத்தீஸ்கரில் பரபரப்பு !

தன்னை கடித்த பாம்பை மீண்டும் கடித்து அதனை கொலை செய்த சிறுவனின் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கையை சுற்றிய விஷப்பாம்பு.. அதிர்ச்சியில் பாம்மை கடித்து கொலைசெய்த சிறுவன்.. சத்தீஸ்கரில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். காட்டுப்பகுதி என்பதால் அங்கு பாம்புகள் சர்வசாதாரணமாக உலாவருவது வழக்கம்.

அங்குள்ள பந்தார்பத் கிராமத்தை சேர்ந்த தீபக் எனப்படும் 8 வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று திடீரென அவரின் கையை சுற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் அந்த பாம்பை உதறியபோது அந்த பாம்பு அவரை கடித்துள்ளது.

கையை சுற்றிய விஷப்பாம்பு.. அதிர்ச்சியில் பாம்மை கடித்து கொலைசெய்த சிறுவன்.. சத்தீஸ்கரில் பரபரப்பு !

இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னை காப்பாறிக்கொள அந்த பாம்பை பிடித்து அதனை இருமுறை கடித்துள்ளார். இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறுவன் நலமாக இருக்கிறார். இது குறித்துப் பேசிய சிறுவன், "என் கையை சுற்றிய பாம்பு என்னை கடித்ததால் அதனை இருமுறை கடித்தேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories