India
“ஒத்த ஜடை போட்டது ஒரு குத்தமா ?” - சிறுமிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செய்த கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !
இரட்டை ஜடை போடாமல், ஒற்றை ஜடை பின்னி வந்த பள்ளி மாணவியை, வகுப்பறையில் பூட்டி அவரது தலைமுடியை தலைமை ஆசிரியரே வெட்டியுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் என்ற பகுதியை அடுத்துள்ள நவாப்கஞ்ச் என்ற இடத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்களும் படிக்கும் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுமித் யாதவ்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஒற்றை ஜடை போட்டு வந்துள்ளார். இதனை கண்டதும் கோபமடைந்த தலைமை ஆசிரியர், மாணவியை திட்டியுள்ளார். மேலும் கடுமையாக பேசி ஒரு அறைக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கே அவரை அடைத்து அவரது தலைமுடியை வெட்டியுள்ளார்.
இதையடுத்து மாணவி இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் தலைமை ஆசிரியர் இது போன்று செய்வது இது முதல் முறையல்ல என்றும், முன்னதாக பல மாணவிகளுக்கு இது போன்று முடியை வெட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி அனைத்து மாணவிகளையும் அழைத்து பள்ளியில் இரட்டை ஜடை போட்டு தான் வரவேண்டும் என்று தலைமை ஆசிரியர் உத்தரவிட்டதாகவும் கூறினார்.
அதோடு அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும், தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் மாணவி மிரட்டியுள்ளார். மாணவியின் இந்த புகாரையடுத்து காவல்துறை தலைமை ஆசிரியர் மீது காவல்துறையினர் இந்திய சட்டப்பிரிவுகள் 353 ஏ (உடல் தொடர்பு மற்றும் விரும்பத்தகாத மற்றும் வெளிப்படையான பாலியல் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய செயல்கள்) மற்றும் 342 (தவறான சிறைவைப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவி புகார் அளித்த பின், காவல்துறையினர் அவரை தேடுவதை அறிந்த தலைமை ஆசிரியர் உடனே தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!
-
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!