India
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகும் உ.பி: ஆட்டோவில் 18 வயது இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
உத்தர பிரதேச மாநிலத்தின் சட்ட ஒழுங்குதான் அனைத்து மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் கூறி இருந்த நிலையில் ஆட்டோவில் வைத்து இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 18 வயது இளம் பெண் ஒருவர் டியூஷன் சென்று விட்டு ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 2 பேர் சேர்ந்து கொண்டு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் சென்று இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்த விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து அருகே இருந்த காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
பின்னர் போலிஸார் அந்த பெண்ணை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டியூசன் சென்று விட்டு வீடு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!