India
பெண்களைவைத்து பாலியல் தொழில்.. பா.ஜ.க பெண் நிர்வாகி உட்பட 4 பேரை கைது செய்த புதுச்சேரி போலிஸ்!
புதுச்சேரி அருகே ஆரோவில் போலிஸார் குயிலாப்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலிஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அங்குச் சென்று போலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது பெண்களை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்ட வளத்தியைச் சேர்ந்த சிதம்பரகனி (27), திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் (27) ஆகிய 2 பேரை போலைஸார் கைது செய்தனர்.
அதேபோல், , நாவற்குளத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசிலும் போலிஸார் ஆய்வு செய்தனர். அங்கும் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் , புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்தனர்.
ஒரே நாளில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கைது செய்யப்பட்ட வேளாங்கண்ணி என்ற பெண் புதுச்சேரி மாநில பா.ஜ.க நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் குற்றச்செயல்களைச் செய்வதும் அதற்கு உடந்தையாக இருப்பதும் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது.
Also Read
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!