India
“4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகை இல்லை” : பாஜக ஆளும் மாநிலத்தில் புதிய சட்டத்தால் அதிர்ச்சி !
4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அந்த குடும்பத்திற்கு மாநில அரசு வழங்கும் வழங்கப்படாது என்று மணிப்பூர் அமைச்சரவை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் சீனாவை அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், விரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தற்போது புதிய சட்டத்தை அமளிப்படுத்தபட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் என்.பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மக்கள் தொகை கட்டுப்படுத்த புதிய யுக்தியை நடைமுறைப்படுத்த அவசர சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் என் பைரன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் குடும்பத்தில் 4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு மாநில அரசு வழங்கும் எந்த சலுகையும் இனி கிடைக்காது என்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநில மக்கள் தொகை ஆணையம் சட்டத்தின் படி, இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, எந்த ஒரு தம்பதிக்கும் நான்கு குழந்தைகள் மேல் இருந்தால் அந்த குடும்பத்தில் யாருக்கும் மாநில அரசின் சலுகை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் இந்த புதிய உத்தரவால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!