India
திருமணமாகி சில மாதங்களிலே கோடரியால் மனைவி கொடூர கொலை.. கணவர் செய்த செயலால் ஆந்திராவில் அதிர்ச்சி !
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காந்தம்மா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், காந்தம்மாவிடம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார் கோபால்.
முன்னதாக இவர் காதலித்து வந்த காதலி, கோபாலுக்கு திருமணம் ஆனதையடுத்து தற்கொலை செய்துகொள்வதாக கோபாலை மிரட்டியுள்ளார். இதனால் மிகுந்து யோசனையில் இருந்த கோபால் தனது காதலியிடம் தான் என்ன செய்வது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் கோபாலின் மனைவியை கொலை செய்ய யோசனை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் சேர்ந்து காந்தம்மாவை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று கோபாலின் காதலி வீட்டிற்கு வந்து காந்தம்மாவிடம் தங்கள் காதல் விவகாரத்தை கூறியுள்ளார். மேலும் தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் காந்தம்மாவை கொல்ல போவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன காந்தம்மாவை மறைந்திருந்த கோபால் கோடரியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காந்தம்மாவின் உடலை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு சென்று இருவரும் சேர்ந்து எரித்துள்ளனர். இது நடந்து சில நாட்களில் காந்தம்மாவின் பெற்றோர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோபாலின் வாக்குமூலம் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.
அப்போது தான் தனது காதலியுடன் சேர்ந்து காந்தம்மாவை கொலை செய்து எரித்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்காக மனைவியை கணவரே கோடாரியால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!