India
கர்நாடகாவில் OLA,UBER,RAPIDO-க்கு தடை.. இனி ஆன்லைன் வாடகை ஆட்டோ சேவை இயங்காது ! தடைக்கான காரணம் என்ன ?
இந்தியாவில் ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையில் முன்னணி நிறுவனங்களாக ஓலா, உபர் ஆகிய இரு நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. ஆனால் சமீப காலமாக இந்த இரு நிறுவனங்கள் மீதும் அதிக அளவிலான புகார்கள் எழுந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையை அரசே மேற்கொள்ளும் வகையில் புதிய செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த அரசின் சேவை மக்களிடையே வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் Ola,Uber வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இது போன்ற நடவடிக்கையை எடுக்காமல் ஆன்லைன் வாடகை ஆட்டோ சேவையில் அதிக அளவிலான புகார்கள் வருவதால் கர்நாடகாவில் செயலிகள் மூலம் ஆட்டோ புக் செய்யும் சேவையைத் தடை செய்வதாக கர்நாடக போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஓலா மற்றும் ஊபர் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் இருந்தாலும், குறைந்தபட்சம் ரூ. 100 வசூலிப்பது குறித்து பல பயணிகள் போக்குவரத்துத் துறையிடம் புகார்களை பதிவு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் எனில் 2 கிலோ மீட்டருக்கு 30 ரூபாய் என்பது அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம். ஆனால் இந்த விதிகளை அப்பட்டமாக ஆன்லைன் வாடகை ஆட்டோ நிறுவனங்கள் மீறியுள்ளன.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ஆட்டோ சேவையை நிறுத்துவதுடன் டாக்ஸி உள்ளிட்ட சேவைகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!